கோவையில் குட்டையில் முகாமிட்ட 2 யானைகளை விரட்ட முயற்சி

கோவை: கோயம்புத்தூர் அருகே குட்டையில் முகாமிட்டுள்ள யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். நரசிபுரம் ஆத்தூர் பகுதிக்கு இரவில் உணவு தேடி வந்த 2 யானைகள் காலை நேரமானதால் முகாமிட்டன. யானைகள் நிற்பதை கண்ட கிராம மக்கள் போளுவாம்பட்டி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினரை கண்ட யானைகள் அருகில் உள்ள குட்டையில் தஞ்சம் அடைந்தன. 2 யானைகளையும் பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>