ஒரே நாளில் 5 கடைகளில் கொள்ளை: தாம்பரம் அருகே துணிகரம்

தாம்பரம்: தாம்பரம் அருகே அடுத்தடுத்து 5 கடைகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியில் அடுத்தடுத்து 3 கடைகளின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்திப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உரிமையாளர்கள் வந்து பார்த்தனர். அப்போது தண்டபாணி (39) என்பவருக்கு சொந்தமான மருந்து கடையில் ரூ8 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இவரது கடையை ஒட்டிய சண்முகசுந்தரம் (60) என்பவரின் பால் கடை, கணேஷ் (35) என்பவரின் கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

சேலையூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பழைய ஜிஎஸ்டி சாலையில் விஜயா (48) என்பவரின் மருந்தகத்தின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. பீர்க்கன்காரணை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பழைய ஜிஎஸ்டி சாலை, திலகவதி நகரில் ஜெகதீசன் (34) என்பவரின் பால் கடையை உடைத்து, ரூ2,500 ரொக்கப் பணம் கொள்ளை போயிருந்தது. இவ்வாறு ஒரேநாள் இரவில் தாம்பரம், சேலையூர், பீர்க்கன்காரணை என 3 காவல்நிலைய எல்லை பகுதிகளில் கடைகளை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>