செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் ஓட்டுக் கேட்டீர்களா? இல்லையா ?.. பிரதமர் மோடி, அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் : ராகுல் காந்தி தடாலடி

டெல்லி : பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு ஓட்டுக் கேட்டதா? இல்லையா ? என்பது குறித்து  பிரதமர் மோடி, அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. பெகாசஸ் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ராகுல் காந்தி, திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா, டி.ஆர். பாலு, கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சூலே ஆகியோர் உட்பட 14 பல்வேறு கட்சிகளின் எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ராகுல் காந்தி, பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்களில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. நாங்கள் சபையில் விவாதம் நடைபெறுவதை விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது. நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கவில்லை.ஒட்டுக்கேட்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு ஏன் அஞ்சுகிறது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் திட்டவட்டமான பதிலை ஒன்றிய அரசு கூற வேண்டும்.ஒட்டுக்கேட்க பெகாசஸ் மென் பொருளை மத்திய அரசு வாங்கியதா ? இல்லையா ?பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய அரசு ஓட்டுக் கேட்டதா ? இல்லையா ?என்பதை விளக்க வேண்டும்.செல்போன் ஒட்டுக்கேட்பு தனிநபர் தொடர்பான பிரச்சனை அல்ல. தேசவிரோத நடவடிக்கையாகும்.அரசே நாட்டு மக்களை உளவு பார்த்ததா என்பதை ஒன்றிய அரசு.தெளிவுப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் மவுனம் கலைக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Related Stories: