அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் பொன்முடி

சென்னை: பொறியியல், கலைக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கல்லூரிகள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் பொன்முடி கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 748 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இதுவரை 41ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் நாட்களில் மேலும் விண்ணப்பங்கள் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலம் முடிவுக்கு வரும் வரை 75 சதவீத கட்டணத்தைத்தான் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தவிர அனைத்து பல்கலைக் கழகத்திற்கும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும். பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டைத் த விர மற்ற மாணவர்களுக்கு வரும் 9ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

Related Stories:

>