×

பரமக்குடி பகுதியில் விற்பனைக்கு வந்துள்ள மலைப்பழங்கள்

பரமக்குடி : பரமக்குடியில் மலைப்பிரதேச பழங்கள் மற்றும் வெளிமாநில பழங்கள் படுஜோராக  விற்பனையாகி வருகிறது. வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் அந்தந்த சீசனுக்கு தகுந்தார் போல் பழங்கள் விற்பனை செய்வது வழக்கம். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சீசன் பழங்கள் விற்பனை பாதிக்கப்பட்டது. தற்போது, ஒரு சில தளர்வுகளுடன் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், பரமக்குடி நகர் பகுதியில் மலைப்பிரதேச பழங்கள் மற்றும் வெளிமாநில பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

தற்போது நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக பழங்களுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இங்கு கொல்லிமலை கொய்யா. ஆந்திரா நாவல் பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. அதிக புரதச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கொய்யா பழங்களை அதிகளவில் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். மேலும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நாவல் பழங்களை அதிகளவில் விரும்புகின்றனர். மேலும் மலைப்பிரதேசத்தில் விளையக்கூடிய ரம்புட்டான் பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

குழந்தையின்மை பிரச்னையை தீர்க்க கூடிய ரம்புட்டான் பழங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. குறைந்த அளவில் பழங்கள் வந்துள்ளதால் விலை சற்று அதிகமாக உள்ளது. வரும் காலங்களில் தடையில்லா போக்குவரத்து ஏற்படும் நிலையில் அதிக பழங்கள் விற்பனைக்கு வரப்படும் எனவும் வரத்து அதிகரிக்கும் போது விலை குறையும் என வியாபாரிகள் கூறினர்.

Tags : Paramakudi , Paramakudi: In Paramakudi, hilly fruits and outdoor fruits are selling like hot cakes. Drought District
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு