போலீஸ் உடற்தகுதி தேர்வு 103 பேர் ஆப்சென்ட்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நடந்த உடற்தகுதி இரண்டாம் நாள் தேர்வில் 103 பங்கேற்கவில்லை. 84 பேர் தகுதியிழந்தனர்.இது தொடர்பாக ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் தெரிவித்துள்ளதாவது:ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி எழுத்துத் தேர்வில் தேறியோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது.

இரண்டாம் நாளான நேற்று நடந்த உடற்தகுதி தேர்விற்கு 501 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 103 பேர் பங்கேற்கவில்லை. பங்கேற்ற 398 பேரில் உயரம், மார்பளவு உள்ளிட்ட தேர்வில் 65 பேர், 1,500 மீ ஓட்டத்தில் 19 பேர் என 84 பேர் தகுதி பெறவில்லை. எஞ்சிய 314 பேர் அடுத்தகட்ட உடல் திறன் தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>