×

வேண்டும்..விவாதம்..வேண்டும்..மாநிலங்களவையில் விவாதம் கோரி முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமிழில் முழக்கம்!!

டெல்லி : மாநிலங்களவையில் விவாதம் கோரி முதன்முறையாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வேண்டும், வேண்டும், விவாதம் வேண்டும் என்று தமிழில் முழக்கமிட்டனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் முழக்கமிடுவது தான் வழக்கம். ஆனால் நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை கூட்டத்தில் சட்டத் திருத்த மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டும், வேண்டும், விவாதம் வேண்டும் என்று தமிழில் முழக்கமிட்டனர்.

 தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் மட்டுமின்றி, மற்ற மாநில எம்பிக்களும் வேண்டும், வேண்டும், விவாதம் வேண்டும் என்று தமிழிலேயே முழக்கமிட்டனர்.ஆனால் கடும் அமளிக்கு இடையே அமைச்சர் ஸ்மிருதி இராணி, சிறார் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்பியுமான ஜெயராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வழக்கமான மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் கோஷம் எழுப்புவார்கள். ஆனால் இந்த முறை வித்தியாசமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரையும் தமிழ் மொழி இணைத்துள்ளது.

Tags : மாநிலங்களவை
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...