வீட்டுக்குள் நுழைந்த பாம்பு

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள கோவிந்தன் நகர் காலனி பகுதியில் வீட்டுக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள கோவிந்த நகர் காலனியில் வீட்டுக்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்து இருப்பதாக தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து திருவில்லிபுத்தூர் வனப்பகுதியில் விட்டனர். அந்த பாம்பு சுமார் 5 அடி நீளமுள்ளது என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>