புனித பனிமயமாதா திருத்தல ஆண்டு பெருவிழா-கொடியேற்றத்துடன் துவக்கம்

பெரம்பலூர் : பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தல ஆண்டுப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையிலுள்ள புனித பனிமய மாதா திருத்தலத் தின் ஆண்டுப் பெருவிழா வருடந்தோறும் ஆகஸ்டு 5ம் தேதி சிறப்பாக கொண்டா டப்பட்டுவருகிறது.இதனை யொட்டி நடப்பாண்டுக்கான ஆண்டுப்பெருவிழா நேற்று மாலை 6மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றத் துடன் தொடங்கியது.

பெரம்பலூர் மறைவட்ட முத ன்மை குருவும், பனிமய மாதா திருத்தல பங்குகுருவுமான ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கும்பகோணம் மறைமாவட்ட முதன்மை குருவான அமிர்தசாமி கலந்துகொண்டு திருவிழாக் கொடியை ஏற்றிவைத்தார்.இதனைத் தொடர்ந்து நவ நாள் வழிபாடு மற்றும் சிற ப்புத் திருப்பலி நடைபெற் றது. இதில் பெரம்பலூர் சுற்றுவட்டார பங்கு குருக்கள், அருட்சகோதரிகள், பங்குப் பேரவையினர், கத்தோலிக்க சங்கத்தினர், பொது மக்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு பக்தியுடன் பனிமய மாதாவை வழிபட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடைக் காரணமாக கொடி ஊர்வலம் நடைபெறவில் லை.இதனைத் தொடர்ந்து திரு விழா நடத்தப்படும் ஆகஸ்ட் 5ம்தேதிவரை ஒவ்வொரு நாளும் நவநாள் வழிபாடு மற்றும் மறையுரைகள் பல் வேறு பங்கு குருக்களைக் கொண்டு நடத்தப்பட உள் ளது. 4ம்தேதி மாலை கும்ப கோணம் மறைமாவட்ட ஆ யர் அந்தோணிசாமி கலந் து கொண்டு சிறப்பு பாடல் திருப்பலியை நடத்துகிறா ர். 5ம்தேதி பங்குகுரு ராஜ மாணிக்கம் நன்றித் திருப் பலியை நடத்துகிறார். கொ ரோனா தொற்றுப் பரவல் தடைகாரணமாக 4ம்தேதி சப்பர பவனிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Related Stories: