×

அவைகளில் பொதுச்சொத்தை சேதப்படுத்துவது சுதந்திரமல்ல: உச்சநீதிமன்றம்

டெல்லி: சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவது கருத்து சுதந்திரமல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏக்கள், எம்பிக்களுக்கான பாதுகாப்பு என்பது தடையின்றி தொடர்ந்து பணி செய்ய மட்டும் தான். கிரிமினல் விவகாரங்களில் ஈடுபடும் போது அவற்றில் இருந்து எம்.எல்.ஏ, எம்பி தப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 2015ல் கேரள பேரவையில் பட்ஜெட்டின் போது அமளியில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஆட்சியில் இருக்க கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களை சேதப்படுத்திய எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறக்கோரி கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

Tags : Supreme Court , supreme court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...