×

காஷ்மீரில் மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலி..40 பேர் மாயம்..!!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 40 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். காஷ்மீர் முழுவதும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிஸ்துவார் மாவட்டத்தில் உள்ள குலாப்கர் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு மிக பலத்த மழை கொட்டியது. இதனால் உருவான திடீர் வெள்ளம் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அடித்து சென்றது. கட்டிட இடிபாடுகள் மற்றும் பாறை இடுக்குகளில் இருந்து இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 40 பேரை ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மேலாண் படையினரும் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. விகாஸ் நகர் நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பாறைகள் அப்பளம் போல நொறுக்கிவிட்டன. மக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்ததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று இமாச்சல் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சாலைகளில் விழுந்துள்ள பாறைகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


Tags : Kashmir , Kashmir, floods, 4 killed, 40 injured
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...