×

வேரோடு சாயும் மரங்கள்..தூக்கி வீசப்படும் மின்கம்பங்கள்!: சீனாவில் கடும் சேதங்களை ஏற்படுத்திய இன்-ஃபா சூறாவளி..!!

ஸீஜியாங்: சீனாவின் ஸீஜியாங் மாநிலத்தை புரட்டிப்போட்ட இன்-ஃபா சூறாவளி அந்நாட்டின் கிழக்கு கடற்கரை நகரங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிதீவிர சூறாவளியான இன்-ஃபா, கடந்த திங்களன்று ஸீஜியாங் மாநிலத்தின் கடற்கரை நகரங்களை 2வது முறையாக தாக்கியது. இதில் ஜியாஜிங் நகரில் உள்ள பின்கூ என்ற கடற்கரை பகுதி கடும் சேதங்களை சந்தித்தது. சூறாவளி எதிரொலியாக கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்தன. மரங்கள், மின்கம்பங்கள் வேருடன் சாய்ந்தன.

பலத்த மழையும் கொட்டியதால் ஸீஜியாங், ஜியாங்சு ஆகிய மாநிலங்கள் வெள்ளக்காடாகின. ஸீஜியாங் மாநிலத்தில் பலத்த சேதங்களை ஏற்படுத்திய இன்-ஃபா சூறாவளி அந்நாட்டின் கிழக்கு கடற்கரை நகரங்களையும் தாக்கியது. பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததால் பெருமளவில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. இதுகுறித்து சீன வானிலை மையம் தெரிவித்ததாவது, இன்-ஃபா சூறாவளியின் தாக்கத்தால் தலைநகர் பெய்ஜிங்கிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

விரைவில் இது படிப்படியாக குறைந்துவிடும். இன்-ஃபா சூறாவளியின் தாக்கம் காரணமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. பலத்த மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் ஜின்சான் மாவட்டத்தில் தாழ்வான நிலப்பகுதியில் வசிக்கும் மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். பல்பொருள் அங்காடிகள், நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்வி கூடங்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : China , Trees, power poles, China, In-Fa hurricane
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...