×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி: மகளிர் பேட்மின்டன் குரூப் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி

டோக்கியோ: ஒலிம்பிக்ஸ் மகளிர் பேட்மின்டன் குரூப் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். குரூப் ஜே பிரிவில் முதலிடம் பிடித்த பி.வி.சிந்து கால் இறுதிக்கு முந்தை சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். 2-வது லீக் போட்டியில் 2-0 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை பி.வி.சிந்து வீழ்த்தியுள்ளார்.

மற்றோரு போட்டியில் ஒலிம்பிக்ஸ் வில்வித்தை காலிறுதிக்கு முந்தைய போட்டியில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வி அடைந்துள்ளார். இந்திய வீரர் தருண்தீப் ராயை 6-5 என்ற கணக்கில் இஸ்ரேல் வீரர் இதாய் ஷேன்னி வீழ்த்தியுள்ளார். மேலும் இந்திய வீரர் தருண்தீப் ராய் முதல் சுற்றில் வெற்றி பெற்ற நிலையில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் தோல்வி அடைந்துள்ளார்.

அதனையடுத்து ஹாக்கி போட்டியில் பிரிட்டன் அணியிடம் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்துள்ளது. மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Tokyo Olympics Competition ,Women's Batminton Group ,Veyarangan ,PA ,Sindhu , Tokyo Olympics: PV Sindhu wins women's badminton group round
× RELATED அணு ஏவுகணை தாக்குதல் பற்றி...