×

கொத்தனாரிடம் நகை பறிப்பு

பூந்தமல்லி: சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் ராமு(58). கொத்தனார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் வளசரவாக்கத்தில் தங்களது வீட்டில் வேலை இருப்பதாக கூறி ராமுவை ஆட்டோவில் ஏற்றிச்சென்றார். வளசரவாக்கம் ராதாகிருஷ்ணன் சாலை அருகே வந்தவுடன் ஆட்டோவை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் ராமு அணிந்திருந்த இரண்டரை சவரன் நகைகளை பறித்தனர். மேலும் அவரை மிரட்டிவிட்டு அங்கேயே இறக்கி விட்டுச்      சென்றுள்ளனர். புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags : Jewelry flush, masonry, police,
× RELATED பெண்ணிடம் நகை பறிப்பு