×

சூதாட்டம் 4 பேர் கைது

புழல்: செங்குன்றம் அடுத்த வடகரை  அருகே தனியார் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த  அலுவலத்தில், சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக செங்குன்றம்  போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்,  போலீசார் நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்துக்கு சென்று சோதனை  நடத்தினர். அப்போது, செங்குன்றம் பகுதியை சேர்ந்த சரவணன்(34), கார்த்திக்(38), சுரேஷ்(34), சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கமலக்கண்ணன்(40) ஆகிய 4 பேர் பணம் வைத்து, சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை கைது  செய்து சீட்டு  கட்டு மற்றும் ரூ.49 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Tags : Gambling, arrest, crime,
× RELATED பண்டல், பண்டலாக கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது