தீயில் எரிந்து சரக்கு ஆட்டோ சேதம்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் திருவள்ளுவர் 3வது பிரிவை சேர்ந்தவர் அனிபா(76). சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சவாரி முடிந்து தனது ஆட்டோவை மஞ்சங்குப்பம் சர்ச் ரோட்டில் நிறுத்திவைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர், நள்ளிரவு சரக்கு ஆட்டோ தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி ஆட்டோவில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அவர்களால் ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் எழும்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். வில்லிவாக்கத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனத்துடன் விரைந்து வந்து ஆட்டோவில் பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ஆட்டோ முழுவதும் எரிந்து சேதமானது.

Related Stories:

>