கல்லூரி முன் மாணவி தர்ணா

பூந்தமல்லி: மதுரவாயலில் தனியார் கல்லூரியில்  பூந்தமல்லியை சேர்ந்த பவித்ரா என்பவர் படித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் படித்து முடித்து விட்டார். முன்னாள் மாணவியான அவர் கல்லூரியில் சேர்ந்து படிக்க கொடுத்த சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் தராமலும், சான்றிதழ் தொலைந்துவிட்டதாகவும் கூறியதாக தெரிகிறது. இதனால் பவித்ரா, நேற்று மாலை கல்லூரி வாசலின் முன் அமர்ந்து சான்றிதழ் வழங்க கோரி திடீர் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, மதுரவாயல் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  

மேலும் இதுகுறித்து புகாரளித்தால்  நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து பவித்ரா புறப்பட்டு சென்றார்.இதுகுறித்து மாணவி பவித்ரா கூறியதாவது: நான் இந்த கல்லூரியில்   பி.எட். படித்து முடித்தேன். அப்போது 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ் கொடுத்திருந்தேன். மேற்படிப்பு எம்.எட். இதே கல்லூரியில் படித்தேன். என்னுடைய 10 மற்றும் 12ம் வகுப்பு பி.எட். சான்றிதழ்களை கடந்த 2 ஆண்டுகளாக  திருப்பித்தரவில்லை, என்றார். 

Related Stories:

>