இலவச வீட்டு மனை பட்டா

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட அயிமிச்சேரி ஊராட்சி மக்கள் பல ஆண்டு காலமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர்ந்து தங்கள் ஊருக்கு வரும் அரசு உயர் அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கான வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை வாலாஜாபாத் தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  விழாவில் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் வருவாய் கோட்ட அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு அயிமிச்சேரி ஊராட்சியில் வசிக்கும் 29 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.

Related Stories:

>