வரும் 30ம் தேதி இணையவழி மூலம் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி இணையவழி மூலம் நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜூலை 2021க்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூகுள் மீட் காணொலி காட்சி இணையவழி மூலம் நடைபெற உள்ளது.  கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டார அலுவலகத்தில் அளிக்கலாம். அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி தீர்வு காணப்படும். கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்துவர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>