சாலை விபத்தில் சிற்பி படுகாயம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. வடகடம்பாடி அருகே அங்குள்ள வளைவில் திரும்பியபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் ஒரு சிற்பக் கலைக்கூட பெயர் பலகையில் உரசி சாலையோரம் நடந்து சென்ற குழிப்பாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த சிற்பி காமராஜ்(42), மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். தகவலறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலத்த காயமடைந்த காமராஜை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். மேலும், விபத்து சம்பந்தமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>