×

வாடிக்கையாளர்கள் நன்மதிப்பை பெற்று நடப்பு நிதியாண்டில் கனரா வங்கி சாதனை: முதல் காலாண்டில் ரூ.1,177 கோடி லாபம்

பெங்களூரு: நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதன்மையாக இருக்கும் கனரா வங்கி, நடப்பு 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.1,177 கோடி லாபம் ஈட்டியுள்ளது. சர்வதேச அளவில் ரூ.17,06,422 கோடி வர்த்தகம் செய்துள்ளது.  இது குறித்து பெங்களூருவில் கனரா வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக செயலதிகாரி எல்.வி.பிரபாகர் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் கூறுகையில், கனரா வங்கியின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிதியாண்டிலும் உயர்ந்து வருகிறது. வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்களின் நம்பிக்கையை வங்கி பெற்று வருவதால், இத்தகைய வளர்ச்சியை முன்னோக்கி செல்ல காரணமாகியுள்ளது. கனரா வங்கி சர்வதேச அளவில் ரூ.17,06,422 ேகாடி வர்த்தகம் செய்துள்ளது. செயல்பாட்டு லாபம் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 190 சதவீதமாக உயர்ந்து வருகிறது.

நடப்பு 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் லாபம் ரூ.1,177 கோடியாக உள்ளது. (கடந்த 2020 ஜூன் மாதம் ரூ.406 கோடியாக இருந்தது). நடப்பு நிதியாண்டில் செயல்பாட்டு லாபம் ரூ.5,751 கோடியாக உள்ளது. வட்டியில்லா வருவாய் மூலம் 67.47 சதவீதம் அதிகரித்துள்ளது.கட்டண அடிப்படையிலான வருவாய் 43.61% உயர்ந்துள்ளது.  சர்வதேச அளவில் ஒட்டு மொத்த வர்த்தகம் 9.38% அதிகரித்துள்ளது. வேளாண் உள்ளிட்ட அதை சார்ந்த கடன்கள் 17.03சதவீதமும் சில்லறை கடனில் 9.57 சதவீதமும், வீட்டு கடனில் 13.15 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆர்ஏஎம் மொத்த முதலீடு 55.37 சதவீதமாக உள்ளது.  நடைமுறை மற்றும் சேமிப்பு முதலீட்டில் 12.91 சதவீதமும் சேமிப்பு முதலீட்டில் 12.14 சதவீதமும் உயர்ந்துள்ளது.

சிஆர்ஏஆர் வித்தியாசம் 2021 ஜூன் மாதம் 12.36 சதவீதமாக உள்ளது. சொத்துகள் மீதான வருமானம் கடந்த நிதியாண்டில் 0.16 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 0.41 சதவீதமாக உயர்ந்துள்ளது. பங்கு மீதான வருமானம் கடந்த நிதியாண்டில் 4,51 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 11.53 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் பங்கு முதலீட்டின் மூலம் மூன்று கட்டங்களாக 9,000 கோடி ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 30ம் தேதி வரை நாடு முழுவதும் 9,877 வங்கி கிளைகள் உள்ளது. இதில் 3,047 வங்கிகள் கிராமப்புறங்களில் இயங்கி வருகிறது. நாடு முழுவதும் 11,819 ஏடிஎம் மையங்கள் இயங்கி வருகிறது என்றார்.

Tags : Canara Bank , Customer, goodwill, current financial year, Canara Bank record
× RELATED கருங்கல் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்