கோவாக்சின் தடுப்பூசி அவசரகால பயன்பாட்டு விண்ணப்பமும் ரத்து: பிரேசில் அரசு அறிவிப்பு

ஐதராபாத்: பிரேசில் நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் ரத்து செய்ததை தொடர்ந்து கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை அந்நாட்டு அரசு நிராகரித்துள்ளது.  இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துக்கு பிரேசில் அரசு சமீபத்தில் அனுமதி அளித்து இருந்தது. முதல் கட்டமாக 2 கோடி தடுப்பு மருந்துகளை வழங்குவதற்காக கோவாச்சின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவமானது பிரேசிலின் பிரெசிசா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்சியா மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பிரேசிலின் இரு நிறுவனங்களும் முறைகேடு செய்துள்ளதாக புகார் வெடித்தது. இதனால், தடுப்பூசி வாங்கும் ஒப்பந்தத்தை பிரேசில்  அரசு ரத்து செய்தது. இந்நிலையில், கோவாக்சின் அவரச கால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்துக்கு அனுமதிக்க கோரி பாரத் பயோடெக் நிறுவனம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை பிரேசில் அரசு நிராகரித்துள்ளது. இது தொடர்பாக, பிரேசில் ேதசிய சுகாதார கண்காணிப்பு ஏஜென்சியான அன்விசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவாக்சின் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான நடைமுறைகள் நிறுத்தப்படுகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: