கேரள அரசு லாட்டரியில் கட்டிட தொழிலாளிக்கு ரூ.10 கோடி பரிசு

திருவனந்தபுரம்:கேரள அரசின் சித்திரை விஷு பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 22ம் தேதி நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். குலுக்கல் நடந்து 5 நாட்கள் ஆன பிறகும் அந்த கோடீஸ்வர அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்து வந்தது.  இந்நிலையில் 10 கோடி பரிசு பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி கோழிக்கோடு அருகே உள்ள வடகரையை சேர்ந்த ஷிஜு என தெரியவந்துள்ளது. இவர் கட்டிட தொழிலாளி ஆவார்.

Related Stories:

>