2 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார் பிளிங்கன்

புதுடெல்லி: அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் கடந்த மார்ச்சிலும், பருவநிலை மாற்றத்துக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெர்ரி கடந்த ஏப்ரல் மாதத்திலும் இந்தியாவுக்கு வந்தனர். இவர்களைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், `புதுடெல்லி, குவைத் நகரங்களுக்கு செல்கிறேன். இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனும் இந்தோ-பசிபிக், மத்திய கிழக்கு நாடுகளின் நலனுக்கான ஆதரவு, ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க இருக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

அவர் இன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அப்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியபாதுகாப்பு,  ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி ஆலோசிக்க உள்ளார். குவைத் புறப்படும் முன்பாக பிரதமர் மோடியையும் அவர் சந்திக்க இருக்கிறார்.

Related Stories:

>