உள்துறை அமைச்சர் அமித்ஷா தோல்வி அடைய செய்து விட்டார்: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அசாம் - மிசோரம் மாநில எல்லையில் நேற்று முன்தினம் நடந்த மோதலில், அசாம் போலீசார் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களின் வாழ்க்கையில் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் விதைத்து நாட்டை மீண்டும் தோல்வியுற செய்து விட்டார். இந்தியா இப்போது அதன் பயங்கரமான விளைவுகளை அறுவடை செய்து வருகின்றது,’ என பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம்  பற்றி விசாரிக்க, காங்கிரஸ் சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அசாமின் கசார் மாவட்ட எல்லையில் மோதல் நடந்த இடத்திற்கு சென்று அங்கு தற்போது நிலவி வரும் சூழல் குறித்து நேரில் ஆய்வு செய்யும். பின்னர் ஆய்வு குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய அறிக்கையை கட்சி தலைமையிடம் சமர்பிக்கும் என அசாம் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>