×

பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ்(35). இவர், தனது விவசாய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டி அஞ்செட்டி மேற்கு பிரிவு விஏஓ கார்த்திக்கை (28) அணுகி மனு அளித்தார். அவர் பட்டா மாற்றத்திற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதை தர விரும்பாத பாக்கியராஜ், கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகாரளித்தார். அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை நேற்று விஏஓ கார்த்திக்கை சந்தித்து பாக்கியராஜ் கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர்.


Tags : VAO , Patta, bribe, VAO, arrest
× RELATED போதை மருந்து கடத்திய 2 பேர் சிக்கினர்: 400...