12 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: ரயில்வே ஐஜி சுமீத் சரண், ஊர்க்காவல்படை ஐஜியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி தினகரன், சிலை தடுப்புப் பிரிவு ஐஜியாகவும், திருச்சி ஆயுதப்படை டிஐஜி கயல்விழி, சென்னை போலீஸ் பயிற்சி டிஐஜியாகவும், திருவாரூர் எஸ்பி சீனிவாசன், திண்டுக்கல் எஸ்பியாகவும், இந்தப் பதவியில் இருந்த ரவளிப் பிரியா தஞ்சாவூர் எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பி விஜயகுமார், திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும், தஞ்சாவூர் எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய், ராணிப்பேட்டை எஸ்பியாகவும், இந்தப் பதவியில் இருந்த ஓம் பிரகாஷ் மீனா, சைபர் கிரைம் எஸ்பியாகவும், அடையாறு துணை கமிஷனர் விக்ரமன், சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாகவும், சென்னை மெட்ரோ ரயில் தலைமை பாதுகாப்பு பிரிவு எஸ்பி தேவராணி, சைபர் கிரைம் எஸ்பியாகவும், இந்தப் பதவியில் இருந்த அருண் பாலகோபாலன், மவுண்ட் துணை கமிஷனராகவும், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு எஸ்பி சியாமளா தேவி, சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு துணை கமிஷனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>