பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: கொரோனா பணிக்காக நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில், பணி நீட்டிப்பு வழங்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மதுரை, திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பணிக்காக 5,000 செவிலியர்கள், ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டோம். திடீரென அனைவரையும் பணியில் இருந்து விடுவித்து விட்டனர். இதுவரை பணியாற்றியதற்கு ஊதியமும் வழங்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>