×

தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்தது: மேலும் குறையுமா என எதிர்பார்ப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.184 குறைந்தது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரத்தில் அதிகரிப்பதும், அதே வேகத்தில் அடுத்த சில நாட்களில் குறைவதுமான போக்கும் நிலவி வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,525க்கும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,200க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.23 குறைந்து ஒரு கிராம் ரூ.4,502க்கும், சவரனுக்கு ரூ.184 குறைந்து ஒரு சவரன் ரூ.36,016க்கும் விற்கப்ட்டது. தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் தொடர்ந்து மாற்றம் நீடித்து வருவது நகை வாங்குவோரை குழப்பமடைய செய்துள்ளது. மேலும் அதிக விலைக்கு நகை வாங்கினால், எங்கே இன்னும் விலை குறைந்து விடுமோ என்ற ஏக்கமும் நகை வாங்குவோரிடம் இருந்து வருகிறது.

Tags : Gold price falls by Rs 184 per ounce: Expect further decline
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு