288 சொற்கள், படங்கள் பெயர்களை கூறும் 2 வயது குழந்தைக்கு சாதனை விருது

கோவை: 288 சொற்கள், படங்கள் பெயர்களை மனப்பாடமாக கூறும் கோவை 2 வயது குழந்தைக்கு ‘புக் ஆப் நோபல்’ சாதனை விருது கிடைத்துள்ளது. கோவை மாவட்டம், சரவணம்பட்டி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த மகேந்திரன்-மஹிஷா ஆகியோரின் மகன் உதிரன். ஒரு வயது 11 மாதங்களே ஆன இந்த குழந்தை தமிழ் அகராதி, மாதங்களின் பெயர்கள், வண்ணங்கள், விலங்குகள், பறவைகள் என சுமார் 288 சொற்கள் மற்றும் படங்களின் பெயர்களை தனது மழலை சொற்களால் கூறி அசத்துகிறது.  

குழந்தையின் சாதனை ‘நோபல் புக் ஆப்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து சிறுவனுக்கு நோபல்  புக் ஆப் ரெக்கார்டு தீர்ப்பாளர் சிவமுருகன் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Related Stories:

>