பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பிரதமருடனான சந்திப்புக்கு பின் மம்தா பானர்ஜி கோரிக்கை

டெல்லி: பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க வெள்ளத்தின் போது பிரதமரின் ஆய்வு கூட்டத்தில் மம்தா கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சனையை ஏற்படுத்தியிருந்தது. அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்தார். பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டின் மம்தா பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. சந்திப்பு பின் பேட்டியளித்த மம்தா இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்றும், கூடுதல் தடுப்பூசிகளை வழங்க கோரியதாகவும்,மேற்கு வங்க மாநில பெயர் மாற்றம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாகவும் கூறினார். பிரதமரிடம் ஆலோசித்த விவகாரங்களை பொதுவெளியில் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற மம்தா, உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடத்தவும் வலியுறுத்தினார்.

மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளேன். கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: