கருத்து வேறுபாடு காரணமாக பிரபல நடிகரிடம் விவாகரத்து கோரி மனைவி கோரி கொல்லம் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகரிடம் இருந்து அவரது 2வது மனைவியான நடன கலைஞர் விவாகரத்து கேட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் முகேஷ். சிபிஎம் கட்சியை சேர்ந்தவர். தற்போது கொல்லம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 1987ல் நடிகை சரிதாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. தொடர்ந்து 25 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2011ல் 2 பேரும் பிரிந்தனர். இந்த நிலையில் பிரபல நடன கலைஞரான மேதில்தேவிகாவுடன் முகேசுக்கு தொடர்பு ஏற்பட்டது. பின்னர் கடந்த 2013ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மேதில்தேவிகாவுக்கும் இது 2வது திருமணமாகும். 

இந்த நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மேதில்தேவிகா விவாகரத்து கோரி கொல்லம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: முகேசின் கருத்துகளுடன் என்னால் ஒத்துபோக முடியவில்லை. இதனால் விவாகரத்து செய்ய தீர்மானித்து உள்ளேன். இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். விவாகரத்து பெற்றாலும் 2 பேரும் எப்போதும் நண்பகர்களாகவே இருப்போம் என்றார்.

Related Stories: