உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை தொடங்கியது. துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்கும் வகையில் தொழிற்சாலைகளில் தேவைகளுக்கு ஏற்ப புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை துவங்க வேண்டும் என கூறினார். மேலும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். செப்டம்பர் 15ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது. 

புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, வாக்குச் சீட்டுகளை அச்சடிப்பது உள்ளிட்ட பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல்  நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>