எங்கள் நிலத்தையே பாதுகாக்க எண்ணுகிறோம்; ஒரு இஞ்ச் கூட விட்டுத்தர முடியாது!: அசாம் முதலமைச்சர் திட்டவட்டம்..!!

திஸ்பூர்: அசாம் மாநிலத்திற்கு சொந்தமான நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மிசோரம் உடனான எல்லை பிரச்சனை தொடர்பாக சில்சாரில் பேட்டியளித்த அவர், மிசோரம் சென்று அம்மாநில முதலமைச்சருடன் நேரில் பேச்சுவார்த்தை மேற்கோள்ள தயார் என்று தெரிவித்துள்ளார்.

தங்கள் நிலத்தையே தாங்கள் பாதுகாக்க எண்ணுவதாகவும், அதில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார். சொந்த குடிமக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதை மிசோரம் முதலமைச்சர் நிச்சயம் உணருவார் என்று  ஹிமந்தா பிஸ்வா சர்மா குறிப்பிட்டுள்ளார். மிசோரம் மக்களால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அழிக்கப்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாகவும்  அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>