வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது... ஆற்றங்கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தேனி: வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்று நீா்ப்பிடிப்பில் பெய்து வரும் தொடா் மழையாலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீா் ஆகியவற்றால் வைகை அணை நீா்மட்டம் சீராக உயா்ந்து வருகிறது.

கடந்த ஜூலை 8-ம் தேதி வைகை அணை நீா்மட்டம் 66 அடியாக உயா்ந்த நிலையில், வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த ஜூலை 24-ம் தேதி அணை நீா்மட்டம் 68.50 அடியாக உயா்ந்த நிலையில், 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தற்போது வைகை அணை நீா்மட்டம் 69 அடியாக உயா்ந்துள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிப்பட்டுள்ளது. இதனால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் 1,732 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

வைகை அணை கட்டப்பட்டு 63 ஆண்டுகளில், 30- வது முறையாக அணை நீா்மட்டம் 69 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.

Related Stories: