ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை அகற்றுவதற்கு ஒன்றிய அரசின் கொள்கை என்ன?: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே விளக்கம்

டெல்லி : மாநிலங்களவையில் கழக உறுப்பினரும் தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளருமான மு.சண்முகம் 19.07.2021 அன்று எழுத்துப்பூர்வ மாக எழுப்பிய கேள்வி வருமாறு:-

நாட்டில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை அகற்றுவதற்கு அரசின் கொள்கை என்ன?கடந்த 3 ஆண்டு களாக நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் அளவு எவ்வளவு ?

வரும் ஆண்டுகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி விரிவாகத் தெரிவிக்கவும்?

இந்தக் கேள்விக்கு சுற்றுச் சூழல் வனம் மற்றும் வானிலை மாற்றத்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே அளித்த பதில் வருமாறு:-

அடையாளம் காணப்பட்டுள்ள ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ் டிக்கை அகற்றுவதற்கு பல முனை உத்தியை அரசு பின்பற்றி வருகிறது. (1) விழிப்புணர்வை ஏற் படுத்துதல் மற்றும் பழக்கங்களை மாற்றுதல் (2) அடையாளம் காணப் பட்ட ஒற்றைப் பயன்பாட்டு ஒழுங்குபடுத்தும் அமைப்பைப் பயன்படுத்துதல் குறைந்த அள வில், சேகரித்தல், அழித்தல், மறு சுழற்சி ஆகியவற்றுக்கான குறைந்தபட்சப் பயன்பாட்டுக்கான உயர் திறன் (4) அமைப்பு ரீதியான சேகரித்தல், அழித்தலுக் கான அமைப்பைப் பலப்படுத்துதல் 2016 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேம்படுத்தல் விதிப்படி பிளாஸ்டிக்கை அகற்றுதல் ஆகியவையாகும்.

ஏற்கெனவே 2016 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் விதிகளின்படி 50 மைக்ரான்களுக்கு குறை வான கேரிபேக்குகள், பிளாஸ்டிக் ஷீட்டுகள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், வினி யோகம் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தி தயாரித்து பேக் செய்து குட்கா, புகையிலை மற்றும் பான்மசாலா போன்றவற்றை இருப்பு வைத்தல், விற்பனை செய்தல் ஆகிய விற்பனை செய்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் வனம் மற்றும் வானிலை மாற்றம் அமைச்சர் இந்திய அரசிதழில் வரைவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஜி.எஸ்.ஆர்.எஸ். எண்.169(ஈ) என்ற அந்த அறிவிப்பில் 2016 பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளில் திருத்தம் செய் யப்பட்டுள்ளது. அதன் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பொது ஆலோசனைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டு களாக உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2019 - 2020 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட் டுள்ள பிளாஸ்டிக் கழிவு 34,69,780

2018-2019 -ஆம் ஆண்டில் உருவாக்கப்பட் டுள்ள பிளாஸ்டிக் கழிவு 33,60,043

2017-2018ஆம் ஆண்டில் 23,83,469

அடையாளம் காணப் பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களின் பயன் பாட்டைக் குறைப்பதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

(1) மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஒற் றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை அகற்றுவதற்கு ஒரு சிறப்பு அதிரடிப்படையை தலைமைச் செயலாளர் / நிர் வாகி தலைமையில் அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

(2) மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட ஒன்றிய அமைச்சகங்கள் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை அகற்று வதற்கான விரிவானத் திட்டத்தை உருவாக்கும் படியும் 2016 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை திறமையுடன் அமலாக் கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

(3) சுற்றுச் சூழல் (பாதுகாப்பு) சட்டத்தில் 5 ஆம் பிரிவின் கீழான உத்தரவு கள் அனைத்து மாநிலங் கள் / யூனியன் பிரதேசங் களுக்கு பி.டபிள்யு.எம். விதிகளை அமல்படுத்து வதை பலப்படுத்துவதற் கான அமைப்புகளை உரு வாக்குவதற்காக அனுப் பப்பட்டுள்ளன. அத் துடன் 2016 ஆம் ஆண்டு பி.டபிள்யூ. எம். விதிகளை மீறுவோருக்கு சுற்றுச் சூழல் இழப்பீட்டை மதிப்பீடு செய்வதற்கான வழிகாட்டி நெறிகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் அமைச்சகம் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குக்கான நிலையான வழிகாட்டி நெறிகளை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களுக்கு பிறப்பித்திருந்தது.

(4) அரசு ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ் டிக்குக் கான 2016 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (பி.டபிள்யூ.எம்.) விதி களை திறமையாக அமல் படுத்தவும், ஒற்றைப் பயன் பாட்டு பிளாஸ்டிக்கை அழிக்கவும் விழிப் புணர்வை ஏற்படுத்து வதற்கான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. 2021 ஆம் ஆண்டு ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளுக்கு 2 மாத விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நாடு முழு வதும் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது- அதில்  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கட்டுரைப் போட்டி, பள்ளி மாணவர்களி டையே நடத்தப்பட்டது. ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குக்கு மாற் றுப் பொருளைக் கண்டு பிடிப்பதற்கான மேம் பாட்டில் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்கு வதை ஊக்குவிப்பதற்கும் அதற்கான டிஜிட்டல் தீர்வுகளைக் காண்பதற் கும் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கும் இந்தியா பிளாஸ்டிக் சவால் ஹேக் சதான் 2021 உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக் காக நடத்தப்பட்டது தொடக்க நிலையில் இருப்பவர்கள் தொடக்க நிலை இந்தியா முயற்சி மூலம் அங்கீகரிக்கப்பட் டார்கள்.

இவ்வாறு ஒன்றிய இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே பதிலளித்தார்.

Related Stories:

>