ஆபாச பட வழக்கு... ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்ராவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்.: மும்பை நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குந்ராவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. வெப் சீரிஸ் எடுக்கிறேன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரைக் கடந்த திங்கள்கிழமை இரவு மும்பை போலீஸார் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜ் குந்த்ராவை 27-ம் தேதிவரை போலீஸார் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து இருந்தனர். இந்நிலையில் ராஜ் குந்த்ராவுக்கான போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்ராவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்துள்ளனர். அதனையடுத்து ஜே.எல்.ஸ்ட்ரீம் இந்தியா நிறுவன அதிகாரி ரையான் தோர்ப்பாவையும் 14 நாட்கள் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>