ஈரோட்டில் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவுநீர்.: விதிமீறும் சாயப்பட்டறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு: ஈரோட்டில் உள்ள காவிரி ஆற்றில் சாயப்பட்டறைகள் கழிவுநீர் தொடர்ந்து விடப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது.

இவற்றில் ஒருசில சாயப்பட்டறைகளில் இருந்து சட்டவிரோதமாக சாயக் கழிவுகள் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுவது தொடர்ந்து வருகிறது. அக்ரஹாரம் அருகே பிச்சைக்காரன் பள்ளம் ஓடை வழியாக சாயப்பட்டறைகள் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

சாயப்பட்டறைகள் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கப்படுவதால் தண்ணீர் மாசு அடைந்து அதனை நம்பி இருக்கும் மாவட்டங்களில் குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சட்டவிரோதமாக வெளியேற்றப்படும் கழிவுநீரில் இருந்து நுரை வருவதை மறைக்க பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் சாயப்பட்டறைகள் உரிமையாளர்கள் கற்களை கொட்டியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: