நீங்கள் உங்கள் சிறந்த முயற்சியைக் கொடுத்தீர்கள் :வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

டோக்கியோ : ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டியின் முதல் சுற்றில் வென்று, இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு முதன்முறையாக வெற்றி தேடித் தந்து, அடுத்த சுற்றில் வெளியேறிய இந்திய வாள் வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானி தேவியின் முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

முன்னதாக பவானி தேவி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: 2வது சுற்றில்  உலகின் 3ம் வீராங்கனையுடன் 7-15 என தோற்றேன். நான் என் நிலையை சிறப்பாக செய்தும் வெல்ல முடியவில்லை. என்னை மன்னிக்கவும். ஒவ்வொரு முடிவிலும் ஒரு துவக்கம் இருக்கிறது. நான் எனது பயிற்சியை தொடர்வேன், எனப் பதிவிட்டு இருந்தார்.  

இந்த ஒலிம்பிக் வீராங்கனையின் உணர்ச்சிபூர்வமான ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் ட்வீட் செய்ததாவது:

நீங்கள் உங்கள் சிறந்த முயற்சியைக் கொடுத்தீர்கள், உங்கள் முயற்சி முக்கியமானது.

வெற்றிகளும் இழப்புகளும் வாழ்க்கையின் ஒரு பகுதி.

உங்கள் பங்களிப்புகளில் இந்தியா மிகவும் பெருமிதம் கொள்கிறது. நீங்கள் நமது குடிமக்களுக்கு உத்வேகம் அளிக்கிறீர்கள். எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>