தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் உளவு பார்த்தது இந்திய அரசா ?.. இந்த புகார் அரசுக்கு வெட்கக்கேடானது : ப.சிதம்பரம் விமர்சனம்!!

சென்னை : இந்தியாவில் பெகாசஸ் ஸ்பைவேர் யாருக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெகாசஸ் ஸ்பைவேருக்கு இந்தியாவில் வாடிக்கையாளர்கள் இருந்ததாக புலனாய்வு செய்தி வெளியாகி இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். தொலைபேசி ஒட்டுக்கேட்பு மூலம் உளவு பார்த்தது இந்திய அரசா, இந்திய அரசின் முகமையா அல்லது தனியார் அமைப்பா என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெகாசஸ்-ன் இந்திய வாடிக்கையாளர்களின் பெயர் விரைவில் வெளியிடப்படும் என உறுதியாக இருப்பதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.அதுவரை தொலைபேசி ஓட்டுக் கேட்பு புகார் அரசுக்கு வெட்கக்கேடானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.பெகாசஸ் விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஏற்கனவே இதே விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த கோரி கேரள எம்பி ஜான் உள்ளிட்ட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: