பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்; மாநிலங்களவையில் எதிர்கட்சியின் தொடர் அமளி: மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைப்பு

டெல்லி: மாநிலங்களவையில் எதிர்கட்சியின் தொடர் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் செல்போன் உளவு விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கடட்சிகள் போராட்டம் நடத்தின. சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஒட்டு கேட்பு புகார்களை மத்திய அரசும் , பா.ஜ.க.வும் மறுத்து வருகின்றன. இது புனையப்பட்ட கதை, ஆதாரம் இல்லை என கூறி வருகின்றனர். ஆனாலும் நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கி உள்ளன. எதிர்க்கட்சிகளின் சலசலப்புக்கு மத்தியில் இன்று  மாநிலங்களவை கூடியது பெகாசஸ் செல்போன் உளவு விவகாரத்தை  திரிணாமுல் காங்கிரஸ் எழுப்பியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மக்களவையில் காங்கிரசின் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், அசாம்-மிசோரம் எல்லை மோதலைப் பற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். மக்களவையில் பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்  குறித்து விவாதிக்க காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: