பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி தீவிரம்

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கடந்த 6 மாதமாக ஆகாயத்தாமரை, பொன்னாங்கன்னி உள்ளிட்ட செடி கொடிகள் படர்ந்து ஆற்றை ஆக்கிரமித்திருந்தது. மேலும் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் அதிகம் காணப்பட்டது. கொடிகளின் மேற்பரப்பில் கொக்கு, நீர் குருவிகள் கூடு கட்டி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவி வந்தது.

இதை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் திமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் பாலமுருகன், செல்வன், மீன் முருகன் உள்ளிட்டோர், ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர். தன்னார்வலர்களின் பங்களிப்புடன், ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் 15 மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். பரிசல் மூலம் காவிரி பாலம் பகுதிக்கு சென்ற இந்த மீனவர் குழுவினர், ஆகாயத் தாமரைகளை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரைகளை முழுமையாக அகற்றும் வரை பணிகள் தொடர்ந்து

நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: