பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது.. யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை : உச்சநீதிமன்றம் கருத்து!!

சென்னை : பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு பரபரப்பு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. கொரோனா காரணமாக சிக்னல், மார்க்கெட், பொது இடங்களில் பிச்சை எடுக்க தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பில், பொது இடங்கள், போக்குவரத்து சந்திப்புகளில் இருந்து பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது.

ஏழ்மை தான் ஒருவரை பிச்சை எடுக்க தூண்டுகிறது. வறுமையில் வாடாத எவரும் பிச்சை எடுக்க விரும்பமாட்டார்கள். அதனால், பிச்சை எடுக்கும் நிலைக்கு ஒருவரை வறுமை தள்ளும்போது அவர்களை வசதியானவர்களின் கண்ணோட்டத்தில் அணுக முடியாது. சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்கு உயர் கல்வியை வழங்க வேண்டியது அவசியம். மேலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும். தடை செய்வதை விட பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாவுழ்வு மையம் ஏற்படுத்தி தர வேண்டும்,என்று உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் பிச்சை எடுப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இதுகுறித்து மத்திய அரசும் டெல்லி அரசும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: