மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27% வழங்குக: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு டி.ஆர் பாலு கடிதம்

டெல்லி: மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27% வழங்க கோரிக்கை விடுத்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசின் மருத்துவ கல்லூரிகளில் 27% இடஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மட்டும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு மறுப்பது பற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டே கேள்வி எழுப்பியிருந்தது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவதால் 11,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ கல்வி வாய்ப்பை இழந்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோருக்கான 40 சங்கங்கள் கோரிக்கைகளை அனுப்பிய பின்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தலையிட்டு ஓ.பி.சி-க்கான 27% இடஒதுக்கீட்டை அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் பெற்று தர டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: