தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் அலட்சியம் செய்யும் டெல்டா வைரஸ்.. அதீத வீரியம் பெற்றுவிட்டதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

நியூயார்க் : உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துவிட்டதாக உலக நாடுகள் எண்ணிவிட கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான டெல்டா வைரஸ், தொற்று பரவலை அதிவேகப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக மாறி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.டெல்டா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் விட்டுவைக்காமல் தற்போது மிகவும் வீரியத்துடன் பரவத் தொடங்கி விட்டதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்டா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் அவர்கள் மூலம் எளிதாக பரவி விடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் வலிமை தற்போது கூடுதல் ஆற்றலும் வேகமும் பெற்றுள்ள டெல்டா வைரஸுக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி தான் மரணத்தில் இருந்து மக்களை பாதுகாக்கிறது என்றாலும் அவர்கள் மூலம் தடுப்பூசி போடாதவர்களுக்கு டெல்டா பரவி வருவது தெரியவந்துள்ளது. எனவே முகக்கவசம் மிக முக்கியம் என்பது அரசுகளின் கண்டிப்பாகும்.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆல்பா உருமாற்ற வைரஸை விட டெல்டா வைரஸ், 50%அதிக ஆபத்தானவை என்று அந்த நாட்டின் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. பிற நாடுகளிலும் டெல்டா வைரஸ் பரவி இருக்கும் நிலையில், இங்கிலாந்தில் மற்றும் 3,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் டெல்டா வைரஸ் தொற்று மிகவும் சாதாரணமாகி விட்டதாகவும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் இது பாதித்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 

Related Stories: