×

மிரட்டும் கொரோனா 3வது அலை: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 19.47 கோடியை தாண்டியது..! 41.81 லட்சம் பேர் உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,181,964 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 195,307,896 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 177,100,391 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 84,817 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.47 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 19,53,18,895 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17 கோடியே 71 லட்சத்து 06 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 லட்சத்து 82 ஆயிரத்து 144 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,40,30,333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 84,840 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags : Corona 3rd , Intimidating Corona 3rd wave: Global damage number exceeds 19.47 crore 41.81 lakh people lost their lives
× RELATED மூன்றாம் அலையில் இருந்து தப்பிக்க...