பொதுத்தேர்தலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான் கட்சி வெற்றி

இஸ்லாமாபாத்: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுத்தேர்தல் நடத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்தது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரைவையில் மொத்தம் 53 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 45 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இம்முறை பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ), பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்என்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது.

நேற்று முன்தினம் காலை வாக்குப்பதிவு நடந்த நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், பிரதமர் இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் 45ல் 25 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 11 தொகுதிகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி 6 தொகுதிகளும் பெற்றன. தேர்தல் முடிவுகளை வெளியானதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டன.

Related Stories: