இளம்பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில், கழிப்பறைக்கு சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் கைது செய்தனர். மதுராந்தகம் அடுத்த பள்ளி அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுமதி (25). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 2 வயது மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சேர்ந்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மகளுடன், சுமதி இருந்து கவனித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சுமதி கழிப்பறைக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த வாலிபர் கழிப்பறையில் நுழைந்த  சுமதியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்ககள் ஓடிவந்தனர். அதற்குள் வாலிபர் தப்பி விட்டார்.

புகாரின்படி செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, செங்கல்பட்டு அடுத்த மேலேரிப்பாக்கத்தை சேர்ந்த சுரேந்திரன் (35) என்பவரை நேற்று கைது செய்தனர்.

Related Stories:

>