விதிமீறி கிராவல் மண் திருட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஒன்றியம் திருப்பந்தியூர் ஊராட்சி புறம்போக்கு நிலத்தில் அரசு அனுமதியுடன், கிராவல் மண் எடுக்கும் பணி  கடந்த மே மாதம் துவங்கியது. கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிராவல் மண் கடந்த சில தினங்களாக விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்டு வந்தது. இவ்வாறு எடுக்கப்படும் கிராவல் சுற்றுவட்டார பகுதியிலேயே விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராவல் மண் எடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் பல்வேறு புகார் மனுக்களை கொடுத்திருந்தனர். திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் கிராவல் மண் எடுக்கும் பகுதிக்குச் நேற்ற சென்று  கிராவல் மண் எடுத்ததை கண்டுபிடித்து தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Stories: