19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

புழல்: சோழவரம்  ஜனப்பன்சத்திரம் - பெரியபாளையம் நெடுஞ்சாலை அருகே தனியார் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகள், பதுக்கி வைத்திருப்பதாக நேற்று மதியம் சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது, அங்கு குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு சொந்தமான லாரி நின்று கொண்டிருந்தது. மேலும், அதன் டிரைவர் மற்றும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, லாரியில் இருந்து அரிசி ஆலையில் இறக்கி பதுக்கப்பட்டதும் ஊறுதியானது. 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>